Tuesday, 17 February 2015

பெறுநர்;                                                                                                          
         திரு.பொன்குமார். அவர்கள்,                                                        
         தலைவர்,
         மிகவும் பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு,
         சென்னை
பொருள் - குன்னுவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க                                                                                                                                                                             மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தல் தொடர்பாகவும்,தமிழக அரசு குன்னுவர் இன மக்களுக்கு இடைக்கால நிவாரணமாக கல்விமற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்குதல் தொடர்பாகவும்………
                                                                                                                    தமிழ்நாடு திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைத்தொடர் என                                  அழைக்கப்படும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பூர்வகுடிகளான குன்னுவர் இன மக்கள் விவசாயிகளாகவும்,விவசாயக்கூலிகளாகவும் (33) முப்பத்து மூன்று செட்டில்மெண்ட் கிராமங்களில் பதினைந்தாயிரம்(15000) மக்கள் தொகையோடு தங்களுக்கென தனிப்பட்ட பழக்கவழக்கங்கள்,சடங்குகள் மற்றும் கலாச்சாரத்தோடு கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்.தொல்காப்பியம்,சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள குன்றவர்கள் பழனிமலைதொடரில் வாழும் குன்னுவரே ஆவர். பனிரெண்டாண்டுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் வழிபாடு இம்மக்களிடையே காணப்படுகிறது சங்க இலக்கியப் பதிவுகள் இம்மக்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பேச்சு மொழிகளில் காணமுடிகிறது. பேச்சு வழக்கில் ஒன்று என்பது ஒன்னு என மறுவிவருவதைப் போல் குன்றுவர்-குன்னுவர் என்றாகிறது.இதனை சென்னைப் பல்கலைக் கழகப பேரகராதி குன்னுவர் என்பதற்கு  பழனிமலைத் தொடரில் வாழும் ஓர் இனத்தினர் என்று உறுதிப்படுத்துகிறது.           
குன்னுவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பல ஆண்டுகளாக மத்திய ,மாநில அரசுகளுக்கு,கோரிக்கை மனு அனுப்பியும் சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் கோரிக்கை மனுக் கொடுத்தும் வருகின்றோம்.இதன் பயனாக தமிழ்நாட்டில் உள்ள குன்னுவர் இன மக்களை அட்டவணைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க 1967ம் ஆண்டு மத்திய அரசு   சட்டவடிவம் ஏற்படுத்தி மக்கள் சபையில் அறிமுகப்படுத்தியது மத்திய அரசின் சட்டவடிவ எண்-119/1967 இதன் நகல் தங்கள் பார்வைக்கு இணைக்கப்பட்டுள்ளது.
மேலே கண்ட சட்ட வடிவை மக்கள் சபையில் சமர்பித்து விவாதம் நடத்தப்பட்டது விவாதத்தின் முடிவில் குன்னுவர் பழங்குடியினரா என மறு ஆய்வு செய்ய விசாரணைக் கமிசன் மற்றும் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது.
அவை
1 எ.எ.டி.லூயிஸ்,டெல்லி விசாரணைக் கமிசன்-1959
2.சந்தா கமிட்டி செப்டம்பர்-1968
3.பி.மண்டல் அவர்களின் தலைமையில் மண்டல் கமிசன்-1979-80
4ஒய்.பி.மாரவாஹா அறிக்கை டெல்லி-1981
மேற்கண்ட குழுக்கள் தமிழகம் வந்து சம்மந்தப்பட்ட அமைச்சர்கள்,அரசு உயரதிகாரிகளிடம் விசாரணை செய்து மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வாழும் குன்னுவர் இன மக்களின் வாழ்விடங்களுக்கு ஆய்வுக்குழுவினர் நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து குன்னுவர் இனத்தவர் பழங்குடியினர் என அரசுக்கு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளது  
குன்னுவர் பழங்குடியினர் என மானுடவியல்துறை பேராசிரியர்களும்,ஆராய்ச்சி அறிஞர்களும் பல குறிப்புகள் மற்றும் ஆதாரங்களை  அனுப்பியும் மத்திய அரசு இம்மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவில்லை பழங்குடியினர் பட்டியலில் .இடம் பெறாததற்கான காரணம் தெரியவில்லை மேலும் இவர்களை சரியான பாதையில் வழிநடத்திச் செல்ல தலைவர்கள் இல்லாமையும் அறியாமையும் கல்வியில்லாமையும் காரணமாக அமைகிறது
மேலே கண்ட குறிப்புகளின் அடிப்படையிலும் மக்கள் சபையில் அறிமுகம் செய்து சட்ட வடிவ எண்-119/1967 மேற்கோள்காட்டி 1971 ஆம் தமிழக அரசு குன்னுவர் இன மாணவ மாணவிகள் தங்கிப் பயிலும் பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகளில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு பூர்த்தியாகாத இடங்களை மலை வாழ் இனமான குன்னுவர் இன மாணவ மாணவிகளுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டுமென 1971ம்ஆண்டு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.     

தமிழக அரசுக்கு கோரிக்கைகள்
1. குன்னுவர் இன மாணவ மாணவிகளுக்கு பள்ளி,கல்லூரி விடுதிகளில்  தங்கிப் பயில பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை வழங்கியதைப் போல கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்களில் பூர்த்தியாகாத இடஒதுக்கீட்டை இவ்வினமக்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம் குன்னுவர் மக்களில் அதிக பட்ச உயர்ந்த பதவி பள்ளி ஆசிரியர்களே மற்ற துறைகளில் உயர் அதிகாரிகள் யாரும் இல்லை நிலையான வருமானத்தைப் பெறுவதற்கு கல்வி ஒன்றே இம்மக்களுக்கு மூலதனம். ஆகையால் அரசாங்கம் இம்மக்களுக்கு கல்வி,வேலைவாய்ப்பில்  இடஒதுக்கீடு வழங்கி இச்சமூகத்தினரை மற்ற சமூகத்தினரைப் போன்று வாழ்க்கையில் முன்னேற்றம் பெற்று தன்னிறைவு அடையச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்
2. தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 41 சமூகங்கள் உள்ளன. நகரங்களில் அதிக மக்கள் தொகையுடனும், கல்வி, பொருளாதாரம், தொழில்களில் முன்னேற்றம் அடைந்துள்ள எம்.பி.சி இன மக்களோடு மலைவாழ் மக்களான குன்னுவர்கள் போட்டி நிறைந்த இன்றைய சமுகச் சூழலில்  முன்னேற முடியவில்லை என்பது அறிந்ததே. ஆகையால் தமிழக அரசு எம்.பி.சி.மொத்த இடஒதுக்கீட்டில் குன்னுவர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கி இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கச் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்
       3. குன்னுவரின் மக்கள்தொகை பதினைந்தாயிரத்திற்கும் குறைவு.இவர்களில் பட்டதாரிகள் மற்றும் உயர்கல்வி வரை கல்வி கற்றவர்கள் மிக மிகக் குறைவு. ஆகையால் பழங்குடியினரின் பூர்த்தியாகாத வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டை குன்னுவர்களுக்கு பெற்றுத்தந்து இம்மக்களின் வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்
4. தாங்கள் 15.02.2014, 16.02.2014 தி.மு.க மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்புக் கடிதம் கலைஞர் கருணாநிதி அவர்கள் அனுப்பியதை உழைப்பாளர் முரசு இதழில் வெளியிட்டுயிருந்தீர்கள். குன்னுவர்களின் நலன்கருதி தி.மு.க மாநாட்டில்   பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாகவும்,தி.மு.க பாராளுமன்றத் தேர்தல் அறிக்கையில்.வெளியிடவும்.மேலும் தமிழகத்தில் பூர்த்தியாகாத பழங்குடியினரின் இடஒதுக்கீட்டை மலை வாழ் இனமான குன்னுவர்களுக்கு பெற்றுத்தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்   குன்னுவர் சமுதாயத்தினரிடம் தங்களின் உழைப்பாளர் முரசு இதழை கொண்டுசென்று தாங்கள் குன்னுவர் சமுகத்திற்காக தாங்கள் மேற்கொண்ட முயற்சி மற்றும் உழைப்பினை வெளிப்படுத்தியிருக்கிறொம் குன்னுவர்களுக்கு நல்ல வழி காட்டி முன்னேற்றப்பாதையை ஏற்படுத்தித் தரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்                                                                  

நன்றி

இடம்: கொடைக்கானல
தேதி:13.02.2014                                              
                                                    

குன்னுவர் சமுதாயம்,கொடைக்கானல்